


நாட்காட்டி
No events |
No events |
காலமற்ற தோன்றாப் பெருமையன் "ஞானலிங்கேச்சுரன்" சிவபெருமான் கழகம் கண்டு, படைத்த தமிழும் சைவமும் ஒப்பிடமுடியாப் பெரும் பேறுகொண்ட திருநெறியாகும். இப்பெரும் நெறியினை ஒழுகி வாழ்வதை நோக்கமாகக்கொண்டு சைவநெறிக்கூடம் 1994ல் சுவிஸ் நாட்டில் தோற்றம் பெற்றது. பெருங்கடலில் சேரும் சிறுதுளி வெள்ளமாக, அப்பர் சுவாமிகள் திருநாவுக்கரசர் அருளிய தமிழ்ப்பணித் திருத்தொண்டை, ஞானக்குழந்தை ஞானசம்பந்தரை வணங்கி, ஆரூரன் தொண்டனைத் தொழுது, மாணிக்கவாசகர் திருவடிபணிந்து சைவநெறிக்கூடம் பணிசெய்கிறது. இதன் அடிப்படையில் வருடம் தோறும் சைவநெறிக்கூடத்தால் முன்னெடுக்கப்படும் எம் செந்தமிழ்ச் செல்வங்களுக்கான "சைவமும் தமிழும் போட்டிநிகழ்வு" கீழ்க்காணும் வகையில் நடைபெற ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
போட்டியில் பங்கெடுக்கும் அனைவருக்கும் மதிப்பளிப்பும், பங்கெடுத்தமைக்கான சான்றிதழும், நினைவுப்பரிசும், வெற்றியீட்டும் போட்டியாளர்களுக்கு வலயரீதியில் முதலாம், இரண்டாம், மூன்றாம் பரிசுக்கேடயமும், வெற்றிச் சான்றிதழும் பேர்ன் மாநிலத்தில் நடைபெறும் "சைவமும் தமிழும் 2016 விழாவில்" வழங்கப்படும். விழா நடைபெறும் காலம், இடம் என்பன போட்டி நுழைவுக் கடிதத்துடன் அனுப்பிவைக்கப்படும். போட்டி நோக்கம் பிள்ளைகளை ஊக்குவிப்பது ஆகும். மேலும் குழந்தைகளின் மனதில் வெற்றி தோல்விகளை எதிர்கொள்ளும் மனப்பாங்கினையும், உளத்திறனை வளர்க்கவும் ஊக்கப்படுத்தவும் இது வழிசெய்யும். அன்புமிக்க பெற்றோர்களே, உங்கள் பிள்ளைகளை இப்போட்டியில் பங்கெடுக்கச்செய்து இளந்தமிழ்ச் செல்வங்களின் தமிழ்த்திறன் வளர்க்க அன்புடன்; அழைக்கின்றோம்.
போட்டி விதிமுறைகள்:
• நடுவர்தீர்ப்பே இறுதியானது - விண்ணப்பத்துடன் போட்டியாளரது அடையாள அட்டை நகல்
கட்டணச்சான்று (Empfangsschein) இணைக்கப்படவேண்டும்.
முடிவுத்திகதி: 27. 05. 2016! இத் திகதிதிக்குப் பின்னர் அணுகப்படும் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.!!!
• விண்ணப்பம் முடிவுத்திகதிக்கு முன்னர் SAIVANERIKOODAM, Europaplatz.01, 3008 Bern எனும் முகவரிக்கு கிடைக்கக்கூடிய வகையில் அனுப்பப்பட வேண்டும்.
போட்டிக்கட்டணம்:
ஒருபோட்டிக்கான கட்டணம் 10.-- சுவிஸ்பிராங்குகள் ஆகும். மூன்று போட்டிகளுக்கு மேலாக விண்ணப்பிக்கும் ஒவ்வொரு போட்டிக்கும் மேலதிகமாக 5.-- சுவிஸ்பிராங்குகள் மட்டும் செலுத்தப்படவேண்டும். ஒரு குடும்பத்தில் இருந்து மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட பிள்ளைகள், அனைத்துப் போட்டிகளிலும் பங்கெடுப்பின், 3வது பிள்ளைக்கு போட்டிக்கட்டணம் கிடையாது. சைவநெறிக்கூடத்தின் 30-468890-2 தபாற்கணக்கில் (PostFinance) போட்டிக் கட்டணத்தைச் செலுத்தி அதற்கான சான்றினை விண்ணப்பத்தோடு இணைத்து அனுப்பவேண்டும். தபாற்கட்டணக்கட்டளையில் நோக்கம் (Zahlungszweck) என இருக்கும் பெட்டகத்தில் போட்டிக்கட்டணம் எனத் தமிழில் குறிப்பிடவும்.
திருவுரு வண்ணம் தீட்டல்: போட்டியில் வழங்கப்படும் திருவுருவத்திற்கு போட்டியாளர் தாம் விரும்பும் வகையில் வர்ணம் தீட்டலாம். போட்டியில் பங்கெடுக்கும் பிள்ளைகள் வர்ணம் தீட்டுவதற்கான அனைத்துப் பொருட்களையும், வர்ணத்தினையும் தாமே போட்டிநிலையத்திற்கு எடுத்துவரவேண்டும்.
திருவேடம் தாங்கல்: பேர்ன்மாநிலத்தில் போட்டிகளின் நிறைவில் நடைபெறும் சைவமும் தமிழும் பரிசளிப்பு நிகழ்வில் (காலம், இடம், பின்னர் அறிவிக்கப்படும்.) மேடையில் போட்டிநிகழ்வாக நடைபெறும். பங்கெடுக்க விரும்புவோர் திருவேடத்திற்கான அனைத்துப் பொருட்களையும் தாமே எடுத்துவரவேண்டும். சைவத் தமிழ் மக்களுக்கு மதிப்பளிக்கக்கூடிய திருவேடம் எதையும் மேடையில் ஒப்பனைசெய்து வலம் வந்து, விரும்பின் 1 நிமிடம் பேசலாம் அல்லது வெறும் ஒப்பனையுடன் வலம் வரலாம். ஒப்பனைக்கும், பாவனைக்கும் புள்ளிகள் வழங்கப்படும். திருவேடம்தாங்கல் போட்டி விண்ணப்ப முடிவுத் திகதி: 31. 05. 2016 ஆகும்.
திருக்கதை: மேற்காணும் போட்டிப் பட்டியலில் வழங்கப்பட்டிருக்கும் சைவசமயப்பெரியோர் வாழ்க்கைக் கதையினை பிள்ளைகள் தமது இயலில் கதையாக ஒப்புவிக்கவேண்டும். குறைந்தது பட்டியலில் குறிக்கப்பட்டிருக்கும் நேரத்திற்கு அமைவாக கதை அமையவேண்டும், ஆகக்கூடியது குறிக்கப்பட்ட நேரத்தைவிட 1 நிமிடம் அதிகம் எடுத்துக்கொள்ளலாம்.
சைவமும் தமிழும் 2016 போட்டிக்கான பாடல்கள்...
ஊடகப்பதிவுகள்
1 செய்திகள்
2 செய்திகள்
3 செய்திகள்
4 செய்திகள்
5 செய்திகள்